பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியின்

முத்தமிழ் மன்றம்

வழங்கும்

அமுத சுரபி - 2024

"செந்தமிழ் என்பார், தேன்தமிழ் என்பார்,
சிலர் தன் தமிழும் என்பாரே
செம்மை அதன் பால் தாய்மை குணத்தால்
போற்றுது பார் இப்பாரே "

Prize Details

முதலாம் பரிசு :

₹ 25,000/-

இரண்டாம் பரிசு :

₹ 15,000/-

மூன்றாம் பரிசு :

₹ 10,000/-

எங்களைப்பற்றி

பண்ணாரி அம்மான் தொழில்நுட்பக் கல்லூரி என்பது 1996 ஆம் ஆண்டு முதல் சிறந்த சாதனையாளர்களை ஊக்குவித்து வரும் ஒரு சுயாட்சி பொறியியல் கல்லூரியாகும். AICTE ஆல் அங்கீகரிக்கப்பட்டு, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள நம் கல்லூரியானது இயற்கை எழில் சூழ்ந்த வளாகத்தில் உலக தரத்திலான கல்வியை வழங்குகிறது. தரமான வசதிகள், திறமையான பணியாளர்கள் கொண்டு ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான அர்ப்பணிப்புடன், நம் கல்லூரியானது பொறியியல் துறையில் கனவு துளிர்க்கும் மாணவர்களுக்கு ஒரு முன்னணி இலக்காக விளங்குகிறது.தொழில்நுட்ப ஆய்வகங்கள் முதல் சிறப்பு மாணவர் மையங்கள் வரை, கல்லூரி மாணவர்களுக்கு ஒப்பற்ற கற்றல் அனுபவத்தை நம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியானது வழங்குவதன் மூலம் மாணவர்கள் பெரும் உயரத்தினை அடைய உதவி செய்கிறது. NAAC ஆல் 'A+' ஆக அங்கீகரிக்கப்பட்ட நம் கல்லூரி, தனது கல்வித் திறன் மற்றும் தொழில்துறைக்கு ஏற்ற திட்டங்களுக்காக சிறப்பு பெற்றது. பொறியியல் துறையின் எதிர்காலத்தை வடிவமைக்க அர்ப்பணிக்கப்பட்டுள்ள நம் கல்லூரி, 21 ஆம் நூற்றாண்டின் சவால்களை சமாளிக்க மாணவர்களை பயிற்றுவித்து வருகிறது.

தரணி ஆண்ட தமிழுக்கு முச்சங்கம் வைத்தான் பைந்தமிழன். அந்த முச்சங்கத்தில் தவழ்ந்த முத்துக்கு, ஆங்காங்கே மன்றங்கள் அமைத்தான் பாண்டிய வேந்தன். அம் மன்றங்களில் இங்கு ஒரு மன்றம், கால்நூற்றாண்டு கண்ட நம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரியின் "முத்தமிழ் மன்றம்". 1998 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இம்‌மன்றமானது, தமிழ்மொழியின் பண்பாட்டைக் கற்றுத்தரவும் அதை கற்றுக்கொள்ளவும், இது ஒரு பாடசாலை. தமிழர்களின் பாரம்பரியத்தை எடுத்துக்காட்ட, இது ஒரு நாடகமேடை. கலாச்சார சிலம்பினுள் முத்தாக, இது ஒரு நடனமேடை. இப்படி இயல், இசை, நாடகம் என முத்தமிழும் சங்கமிக்கும் ஓரிடம் நம் முத்தான "முத்தமிழ் மன்றம்".

போட்டியைப்பற்றி

"இன்றும் என்றும் எங்களை வழிநடத்தும் பைந்தமிழின் பாதையில்" எண்ணற்ற மாணவர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்து பாதைகள் அமைத்து பயணங்கள் தந்த ஆசிரியப்பெருமக்களுக்கு முத்தமிழை முன்னிலையாக வைத்து பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி நடத்தும் "அமுத சுரபி" கட்டுரை போட்டிக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம். எண்திசையும் வசிக்கும் ஆசிரியர்களையும் முத்தமிழையும் பறைசாற்றும் வகையில் இப்போட்டி அமைய உள்ளது. உங்கள் எண்ணற்ற எண்ணங்களை எழுத்தாக்கி அவ்வெழுத்துக்களை அரங்கேற்ற நினைக்கிறோம். எனவே நம் தமிழ் மொழியின் எதிர்காலத்தை பேணிப்பாதுகாக்க உங்கள் எண்ணங்களை எழுத்தாக்கி, அவ்வெழுத்துக்களை கட்டுரைக்குள் அடக்கி, அது எங்களிடம் வந்தடைய எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

போட்டி பற்றி அறிய →

தலைப்புகள்

  1. பண்டைய தமிழர்களின் ஆய்வுகள்
  2. இசை
  3. மருத்துவம்
  4. திருவிழா
  5. அணிகலன்
  1. பெண் புலவர்களின் படைப்புகள்
  2. வணிகம்
  3. போர்
  4. தமிழர்களின் கட்டிடக்கலை
  5. தமிழர்களின் விளையாட்டுகள்

கால அட்டவணை

  1. பதிவு துவக்கம்

  2. கட்டுரை சமர்ப்பிக்கும் தொடக்க தேதி

  3. பதிவு செய்ய கடைசி தேதி

  4. அஞ்சலில் கட்டுரை சமர்ப்பிக்கும் கடைசி தேதி

  5. போட்டியின் முடிவு அறிவித்தல், பரிசளிப்பு விழா

பதிவு செய்வதற்கான மென்படிவம் →